Total Pageviews

Monday, February 20, 2012

தேவர் பேரவையினர் (இளைஞர் அணி ) காவல்துறையினரோடு தள்ளு முள்ளு.30 பேர் கைது - thevar peravai _ madurai airport _ 19/02/2012

0 comments
 

இன்று காலை தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணியினர் மேற்கொண்ட மதுரை விமான நிலைய முற்றுகையால் விமான நிலைய வளாகமே போர்க்களம்போல காட்சியளித்தது.
காவல்துறைக்கு முன்னறிவிப்பு செய்யாமலேயே போராட்டத்தை நிகழ்த்தியமையால் காவல்துறையினர் திணறிப் போயினர். இது தொடர்பாக தேவர் பேரவை இளைஞர் அணி பொதுச்செயலாளர் திரு பசும்பொன் முத்தையா தேவர் அவர்கள் அளித்த செய்தி :
" மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை வைக்க கோரி தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி சார்பில் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை செவி சாய்க்காத மத்திய அரசின் இந்த செயல் தேவர் மக்களின் மனதை புண்படுத்திய செயலாகும்.

தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி சார்பில் கடந்த 23.10.2011 அன்று இதே கோரிக்கைக்காக மதுரை விமான நிலையத்தை என் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கின்ற வகையில் இந்த முற்றுகை போராட்டத்தை நடத்தியிருகின்றோம் . இதற்கு மேலும் தாமதிப்பின் தமிழகம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இதப் போராட்டத்தில் : வி.பி.தேவன் , ஆர், தேவராஜ், எஸ்.செல்வகுமார், மாவட்ட நிர்வாகிகள் ஜி.சீனு , ராமு, லட்சுமணன், கே.பழனிச்சாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

THANX : DEVARTV.COM
Continue reading →
Saturday, February 18, 2012

தேவர் திருமகன் மகிமை என்று பூரிக்கும் தம்பதியினர்.

0 comments
 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றால் அனைவருக்கும் நினைவு வருவது தேசியமும் , தெய்வீகமும் ஆகும். தன்னுடைய இளமைக் காலம் தொட்டே ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த தேவர் பின்னாளில் முருகப் பெருமானின் அவதாரமாக கருதப்பட்டு
அனைத்து மக்களாலும் வழிபடப் பட்டார். சித்த ஞானத்தால் பறவைகளோடும், விலங்குகளோடும் தன்னுடைய சிந்தனைகளை பரிமாறிக்கொள்ளும் வரம் பெற்றிருந்த தேவர் பெருமகனார் ஒட்டுமொத்த உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதையே அனைவருக்கும் போதித்தார். மக்களோடு மக்களாக தன்னுடைய வாழ்வை கழித்தபோதும் அவரின் தெய்வ அனுகூலங்களை அறிந்த மக்கள் தொடர்ந்து அவரது கோவிலுக்கு சென்று வழிபடுதல் , வேண்டுதல் செய்தல் , நேற்றிக்கடன் செலுத்துதல் , மொட்டையடித்தல் , பால் கொடம் எடுத்தல், முளைப்பாரி போடுதல் என்ற வழிபாடுகள் நீளும்.
தேவர் திருமகனார் அவதரித்ததும் , மறைந்ததும் ஒரே தினமாதலால் அக்டோபர் முப்பது அன்று தேவர் கோவிலில் லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி தரிசிக்க வருவார்கள். அப்படி அங்கே வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை முன்வைத்து செல்வார்கள். பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை முடித்த பிறகும் எட்டு வருடங்களாக குழந்தை பேறின்மை என்ற நிலையில் இருந்த தம்பதியினர் 2010 ம் வருடம் நடந்த குருபூஜை அன்று தனது வேண்டுதலை நிறைவேற்றுமாறும், அப்படி பிறந்தால் அந்த குழந்தைக்கு உங்கள் பெயர் வைத்து உங்களுக்காக தொண்டாற்ற அற்பணிக்க தயாராக வுள்ளேன் என்றும் வேண்டிக் கொண்டாராம். அடுத்த நாற்பதாவது நாளில் நான் கருத்தரித்தேன் என்று கூறிய சீதா மேலும் கூறுகையில் எங்களை பரிசோதித்த மருத்துவர்கள் நான் கருத்தரித்தது நம்பும்படியான நிகழ்வில்லை என்பதால் திரும்பவும் சோதித்து உறுதிசெய்த ஒன்பதாவது மாதத்தில் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சென்ற குருபூஜை அன்று பெயர் வைக்கப்பட்டது. முத்துராமலிங்கம் என்ற பெயரால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். எவ்வளவு அழுகையானாலும் தனது கழுத்தில் கிடக்கும் தேவர் செயின் காண்பித்தால் உற்று நோக்கியபடி சிரித்து விடுவார்" என்று மெய் சிலிர்க்க பேசிப்போனார்கள்.

THANX : DEVARTV.COM
Continue reading →
Sunday, February 12, 2012

பசும்பொன் தேவர் திருமகனாரின் எழுச்சியுரை

0 comments
 
 
"பல மறைக்கப்பட்ட உண்மைகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு (அரசியலை மட்டும்) பதியும் எண்ணம் உண்டு. விரைவில் செய்வோம்." என்று சொல்லியிருந்தேன். அன்றைய சூழ்நிலைகளை பசும்பொன் தேவர் திருமகனாரின், அவர்களே விளக்கும் மதுரை தமுக்கம் "ஜனநாயக காங்கிரஸ் மாநாடு" பேச்சு உங்களுக்கு இன்றும் உண்மையின் உரைகல்லாக இருப்பது அதை கேட்கும் போது புரியவரும். நம் நாடு நடந்து வந்த பாதை பற்றிய தெளிவு கிடைக்கும்.

இன்றும் ஏன் காங்கிரசும், பாரத நாட்டு அரசியலும், பொருளாதாராமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது? அதன் மூலம் என்ன? எப்படி எல்லாம் அதற்கு அன்றே சதி செய்யப்பட்டது? அதன் உலக அரசியல் என்ன? அன்றைய தலைவர்களின் கோழைத்தனமான துரோகம் என்ன? வீரியங்கள் எல்லாம் எப்படி இரண்டாம் பட்சமாக ஆக்கப்பட்டது? இன்றும் பாகிஸ்தானில், இலங்கையில், முல்லைபெரியாரில், கூடங்குளத்தில் அதற்கான எதிரொலி என்ன? என்பதை அரசியம் தெரிந்தவர்கள் பசும்பொன் தேவர் திருமகனின் பேச்சை கேட்கும்போது மேலும் புரிந்து கொண்டு தெளிவு சேர்த்து கொள்ளமுடியும்..

அவர் பேசிய அந்த உலக, பாரத, தமிழக அரசியல் வீரிய பேச்சின் சாரம் என்னவென்றால்

ஆங்கிலேய மனோபாவம்
மவுண்ட் பேட்டன் பிரபு
காங்கிரஸ்
வெள்ளையர் வரலாறு பாரத தமிழர் வரலாறாக
ஆகஸ்ட் புரட்சி
புதிய ஆட்சி சதி
துரோகம்
அரசாட்சி யார் செய்ய வேண்டும்
படித்தவன் நிலை
வீரன் நிலை
மெய்ஞானி யார்
அவலட்சணம்
அகிம்சை யார் பேசலாம்
கோழைத்தனம் எப்போது மாலை போட்டுக்கொள்ளலாம்
மகாத்மா யார்
ஞானி யார்
திருவள்ளுவர் அரசியல்
மதம் வாழ சதி
காட்டிகொடுத்தது - சீக்கியர் துரோகம்
கும்பெனியார் ஆட்சி
குதிரை 1:சுதேசிகளை பிரிக்க சூழ்ச்சி
குதிரை 2: காங்கிரஸ் - உண்மையில் சுதந்திர விதை போட்டவர்கள் யார்
குதிரை 3: மெசபடோமியா சண்டைக்கு அகிம்சாவதி செல்வது - பஞ்சாப் படுகொலை பரிசு
அகிம்சாவாதிகளின் ரத்தம்
உலக அரசியல் - யுத்தம்
குதிரை 4: இந்திய அரசு - மஞ்சள் பெட்டி தேர்தல்
மக்கள் அகிம்சைக்கு தயாராக இல்லை
இந்திய ராணுவம் முன்னேற்றம்
இந்திய சேனையின் வீரம்
வேவல் திட்டம்
ஜின்னா - முஸ்லிம் பிரதிநிதித்துவம்
அகிம்சை - சந்தர்ப்பவாதம்
வீரமுமில்லை சாதுவாகவுமில்லை
ராணுவ பட்ஜெட் எதற்க்காக
பாதுகாப்பு மந்திரி
காமராஜ் - முத்தையா செட்டியார் - கிருஷ்ணாமாச்சாரி - பதவி
1930ன் வீரம் 1957ல் காண்கிறேன்
சிம்லா செக்ரட்ரியெட்
பாகிஸ்தான்
எப்படியும் பிழைத்தால் போதும் என்ற சர்க்கார்
திரைமறைவு நாடகம்
தமிழ் மாகாண தரித்திரம்
துரோகியுடன் கூட்டணி - காட்டிக்கொடுத்த கம்யூனிஸ்டுடன்
போராளிகளை கூலிகள் என்றதால்
ராஜாஜி தேவர் பிரிவினால் காமராஜர் தலைவரா?
பின்னர் காமராஜர் ஏன்?
தாயும் மறுத்த காலம்
நீதிக்கட்சிக்கு எதிராக
காமராஜரை கொலை செய்ய
லட்ச லட்சமாக செலவு செய்தவர்களின் நாடார்களின் செயல்
ஏன் ஊமையானேன்
தகப்பனாரே எதிரியாக
காமராஜர் ஜாதிப்பற்று
எல்லா வழக்குகளிலும் முதல் எதிரி
உங்களைவிட வெள்ளைக்காரன் ஆயிரம் மடங்கு நல்லவன்
கொன்று எரித்த அவலம்
Continue reading →

Popular Posts

Popular Posts