Total Pageviews

Thursday, December 22, 2011

VAIRAMUTHU - KAMAL

0 comments
 

நடிகர் கமல்ஹாசனுக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும் எப்போதுமே ஒரு நட்பு உண்டு. அந்த வகையில் தனது படங்களில் வைரமுத்துவுக்கு தவறாமல் பாடல கொடுத்து வருகிறார் கமல். இப்போதுகூட விஸ்வரூபம் படத்தில் ஒரு பாடல் எழுத சொல்லியிருக்கிறார். தான் சொன்னது போலவே அவர் அற்புதமாக எழுதிக்கொடுத்ததால் வியந்து போனாராம் கமல்.

அதோடு ஒரு பேனாவை கமல் பரிசளித்திருக்கிறார். அது சாதாரண பேனா அல்ல. இத்தாலியின் எரிமலை குழம்பிலிருந்து தயாரிக்கப்பட்டதாம். ஜி8 மாநாட்டில்கூட இந்த பேனாவில்தான் கையெழுத்துப்போடுவார்களாம் உலக தலைவர்கள். அத்தகைய பெருமை வாய்ந்த பேனாவை வைரமுத்துவுக்கு பரிசளித்திருக்கிறார் கமல்.
Continue reading →
Sunday, December 18, 2011

USILAMAPATTI PASUMPON COLLEGE

0 comments
 
 
Continue reading →

''ெவறி பிடித்த அரசியல்வாதி இனி யாரும் ேவண்டாம்!' ெவடிக்கிறார் பாரதிராஜா

0 comments
 
 
 
 
 
 
 
Continue reading →

Vivek’s explanation

0 comments
 

Vivek plays a baddie in Vazhipokkan, a film that is being made in Tamil and Kannada. This sudden transition from comedian to villain has raised a query on why the actor opted for it. Answering this question, Vivek said that when the role was offered to him, he felt that he must do it.

The role is etched out very differently and it will be impossible for the audiences to guess the character, said Vivek. The comedian added that he always wanted to try out something new and this opportunity came up with Vazhipokkan.
Continue reading →
Tuesday, December 6, 2011

இயக்குனராகும் கார்த்திக்!

1 comments
 

இயக்குனராகிறார் நவரசநாயகன் கார்த்திக்.

ஒரு காலத்தில் இளம்பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். சமீபகாலமாக சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் கார்த்திக், தற்போது தனது மகன் கெளதமை, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கும் டைரக்டராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மணிரத்னம் படத்தை இயக்கும்போதே, தானும் தனது மகனை வைத்து இன்னொரு படம் இயக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் கார்த்திக். அதற்கான கதை விவாதம், கதாநாயகி தேடல் ஆகிய வேலைகளிலும் சத்தமில்லாமல் இறங்கியிருக்கிறார் நவரசம்.
Continue reading →
Tuesday, November 15, 2011

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வழிவகை செய்யவேண்டும் -அகிம்சை புலிகள் கட்சி

0 comments
 

அகிம்சை புலிகள் கட்சியின் சார்பாக அனுசரித்த தெய்வத்திரு வெள்ளைச்சாமித் தேவர் அவர்களின் நினைவுப் பலகைகளை எமக்கு அளித்த கையேடு


" குற்றப்பரம்பரை தலையை உடைத்த எமது தேசியத் தலைவர் வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடுநடுங்கச் செய்த இந்திய தேசிய விடுதலை போராளி வாய்ப்பூட்டு சட்டம் கண்ட வாய்மை வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வழிவகை செய்யவேண்டும் " என்ற செய்தியை மிகவும் வலியுறுத்திக் கூறினார்.
Continue reading →
Friday, November 11, 2011

SIR VELLAICHAMY THEVAR

0 comments
 
 
Continue reading →
Thursday, November 10, 2011

Devar

0 comments
Continue reading →
Wednesday, November 9, 2011

வெள்ளைச்சாமி தேவர் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

0 comments
 

சென்னை, நவ. 8-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசுகளில் ஒருவருமான என்.வெள்ளைச்சாமி தேவர் நேற்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

வெள்ளைச்சாமி தேவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது இயக்கத்தினைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

வெள்ளைச்சாமி தேவர் மறைவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக நிறுவனத் தலைவர் டாக்டர் என்.சேதுராமனும்றீ இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ``தேவர் சமுதாய மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவரது இழப்புக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் அ.இ.மூ.மு.க. கட்சி கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Continue reading →
Thursday, November 3, 2011

நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம்

0 comments
 
 
1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி...

அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல்... இமானுவேல் கொலை... கீழத்தூவல் படுகொலை... 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது... தொடர் சிறை வாழ்க்கை... 1959 ஜனவரி 7ல் விடுதலை... அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம்... அதனால் நாடாளுமன்ற உறப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு கழித்துத்தான் நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம் ஒலித்தது....

1959 பிப்ரவரி 13... இன்றுதான் பசும்பொன் முத்துராமலிங் தேவர் நாடாளுமன்றத்தில் முழங்க நேரம் ஒதுக்கப்பட்டது... பின் 16 ஆம் தேதியாக அது மாற்றப்பட்டது... இறுதியில் 17ஆம் தேதியின் அந்த வாய்ப்பு பசும்பொன் தேவருக்கு கிடைத்தது. அதுவும் மாலை 4.45க்கு... மாலை 5 மணிக்கு நாடாளுமன்றம் முடிந்துவிடும்... இந்த இடைப்பட்ட கால் மணி நேரத்தில் தமது கருத்து முழுவதையும் பசும்பொன் தேவர் வெளியிட வேண்டும். எழுந்தார் பசும்பொன் தேவர்... ஆங்கிலத்தில் தொடர்ந்தார் முழக்கத்தை... அதுவரை கேட்டறியாத பசும்பொன் தேவரின் ஆங்கில முழக்கத்தை கேட்டு வடமாநிலத் தலைவர்கள் விழிகள் மூட மறந்தன.

மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லிப் பதிப்பு.
"Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory" என்று தேவரின் நாடாளுமன்ற முழக்கம் பற்றி குறிப்பிட்டது.

இனி, நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழக்கம்... தமிழில் தந்திருப்பது ஏ.ஆர். பெருமாள்.

ஜனாதிபதியவர்களின் தலைமையுரை மீது பேச வேண்டிய இவ்வேளையில், நமது வெளிநாட்டுக் கொள்கை, காமன்வெல்த் தொடர்பு முதலியவை பற்றி இடையே கொஞ்சம் விவரிக்க விரும்புகிறேன் - விவரிக்க வேண்டியது அவசியமும் கூட.காமன்வெல்த் என்பதன் பெயரால் நாம் ஒரு கூட்டுறவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நாம் பிணைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் என்ற கூட்டுறவின் பங்காளிகள், நமது நாட்டையும், செல்வத்தையும் சேர்த்துப் பங்குரிமை கொள்ள ஆசைப்படுகிறார்கள். பொதுச் சொத்து என்றும் கருதுகிறார்கள். ஆனால் நமது சுயாதிக்கத்தை அவர்கள் மதிப்பதே இல்லை. நமது நாட்டையும் செல்வத்தையும் அவர்கள் நேசிக்கிற அளவுக்கு நமது சுயாட்சியை நேசிக்கவில்லை என்பதால் இது ஓர் அபாயகரமான கூட்டுறவு என்றே குறிப்பிடலாம்.

மேலும், நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனையையும் அஹிம்சா முறையில் சாதித்துவிட்டதாக ஒரு அபிப்பிராயத்தை உலகெங்கும் உண்டாக்கி விட்டிருக்கிறோம். ஆனால் அகிம்சை என்ற தத்துவம் சிந்திப்பதிலும், பேசுவதிலும் உள்ள எளிமை, அதை நடைமுறைப்படுத்துவதில் இல்லை என்பது அநேகமாக நம் எல்லோருக்கும் தெரியும். அகிம்சை என்பது அரசியல் ரீதியான செல்பாடுகளுக்கு ஒத்தியங்க அல்லது உடன்படுத்தி இயக்க இயலாத ஒரு தத்துவம்! அதைப் பேசலாம் - எழுதலாம், ஆனால் அரசியலில் அதைச் செய்ய முடியாது என்பது கண்கூடு.

எல்லா நாடுகளிலும் - எல்லாப் பகுதிகளிலும், இரண்டு கட்சிகள் உண்டு. ஒன்று வலதுசாரிக் கட்சி - மற்றொன்று இடதுசாரிக் கட்சியாக இருக்கும் - இருந்து வருவதை நாமும் அறிவோம். இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று வேறுபடுமேயன்றி தேசியத்தை - தேச நலனைப் பற்றிய துறையில் வேறுபடாது. இரண்டு தேச பக்தக் கட்சிகள் தான். இரண்டுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, இரண்டு கட்சிகளுமே நாட்டுக்கான கடமையைச் செய்து வருகின்றன. அதேபோல இந்த நாட்டிலும் வலதுசாரி - இடதுசாரி என்ற முறையில் இயங்கினர் - இயங்குகின்றனர்.

தேச விடுதலைக்காகப் பல பயங்கரப் புரட்சிகளைச் செய்த நமது நாட்டு இடதுசாரிகளில், பகவத் கீதையைக் கையில் வைத்துக்கெண்டே அந்நியரின் தூக்கு மேடையில் பலியானோரும், அந்தமான் தீவுகளில் ஆவி துறந்தோரும் கொஞ்சமல்ல, அவர்கள் தேசத்திற்காகவே கடமையைச் செய்து உயிரை இழந்தவர்களாக இருந்தாலும், காந்தீயர்களாக இருக்கவில்லை என்றே கருதப்பட்டார்கள். இதனால் அவர்கள் அடியிட்ட சுதந்திர இந்தியாவில் அவர்களுக்குரிய சிறப்புக்கு இடமில்லாது போய்விட்டது. அதாவது, ஒருவன் தேசத் தியாகியாக மட்டும் இருந்தால் போதாது ? அவன் தேசபக்தன் - தியாகி - என்பதை விட காந்தீயன் - காந்தி பக்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் : போகட்டும்!

'அகிம்சை' என்ற கொள்கை நாம் அடிமைகளாக இருந்தபோது ஓரளவுக்குச்சரி, ஆனால் நாம் இப்பொழுது ஒரு குடியரசை நிர்மாணித்திருக்கிறோம். நமது சர்க்கார் கோடானுகோடி ரூபாய்களைக் கொண்டும் ராணுவச் செலவைச் செய்கிறது. போர்ச்சுகலும், எல்லைப் புறங்களில் பாகிஸ்தான் புரிகிற கொடுமைகளைப் பற்றி, பேசும்போது கூட அகிம்சையைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளத் தவறுவதுமில்லை.

கொள்கையோ அகிம்சை; வருமானத்தில் பெரும்பகுதி செலவிடுவதோ ராணுவத்துக்கு! அதே சமயம் அந்நியர்களின் அக்ரமத்திற்கு முன்னே அகிம்சைப் பேச்சு - ஆனால், அதே சமயம் நாகா மலை ஜாதியினர் மீது பாய ராணுவத்தை ஏவிவிடுகின்றோம் - நமது அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகளைச் சாய்க்கத் துப்பாக்கிகளின் வாய்களைத் திறந்துவிட அனுமதிக்கிறோம்! இது எந்த ரக அகிம்சாவாதம் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

யுத்த முடிந்த ஆரம்பகாலத்தில் எல்லோருமே அமைதி - சமாதானம் பற்றிப் பேசினார்கள். அதற்காக ஐ.நா. சபையும் உண்டாக்கப்பட்டது. ஆனால், சமாதான சாத்தியத்திற்காக உண்டாக்கப்பட்ட உலகப் பொதுச் சபைக்கு ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர்தான் வைக்கப்பட்டதேயன்றி, அதன் நோக்கமெல்லாம் ஐக்கியத்தைப் பிளப்பதாகவே இருக்கிறது. அது பேசுகிற சமாதனாப் பேச்சு, செயலை நெருங்கவே அனுமதிக்கப்படவில்லை....
Continue reading →

தேவர் போற்றி (நெல்லை கண்ணன்)

0 comments
 
 
தேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்
தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்க
காவலெனக் கடவுளரே அனுப்பி வைத்த
கண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளை
வாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னை
வழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்
வாழையடி வாழையென அவரைப் போற்றி
வணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்


மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை

மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்
பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்
பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்
கணம் கூட தனைப் பற்றிச் சிந்திக்காமல்
கர்ஜனைகள் புரிந்து நின்றார் நாட்டிற்காக
நிணம் தசை நார் எலும்பெல்லாம் தேவர் பிரான்
நினைவாக போற்றி நின்று என்றும் வெல்வோம்


உண்மையதே சொத்தாகக் கொண்டிருந்தார்

உயர் குணங்கள் கொண்டிருந்தார் - அச்சமெனும்
புன்மையது அவரிடத்தில் என்றும் இல்லை
புனிதர் எங்கள் தேவர் மகன் நேர்மை எல்லை
கண்ணினிய தமிழினத்தின் உண்மை நெறி
கருத்தாக்கி மேடையிலே பொழிந்த மேகம்
எண்ணி நிற்போம் பசும்பொன்னாம் தேவர் தம்மை
என்றென்றும் தமிழினத்தார் வெற்றி கொள்ள


வேட்பு மனுத் தாக்கல் உடன் முடிந்து விடும்

வெற்றியெனும் செய்தி அன்றே உறுதி படும்
போர்ப் பரணி தேவர் பிரான் போட்டியிட்டால்
போட்டியிடும் தொகுதி யெல்லாம் அவர்க்கே சொந்தம்
காப்பு என்றும் தேவர் பிரான் தமிழருக்கு
கண்ணியமாய் வாழ்ந்திருந்த இனியருக்கு
ஆர்ப்பரித்துத் தேவர் பிரான் போற்றி நிற்போம்
அவர் வழியில் தேசத்தைக் காத்து நிற்போம்


தேவர் இல்லா நாட்டில் இன்று எவரெவரோ

தெய்வம் இல்லை என்று சொல்லி ஆடுகின்றார்
காவலுக்குத் தேவர் பிரான் இல்லையென்று
கண் கலங்கி நிற்கின்றார் நல்லோரெல்லாம்
சேவற் கொடி வேலவனைத் தொழுது நின்ற
செந்தமிழின் தேவர் பிரான் தனை வணங்கி
ஆவலுடன் தேசீயம் தெய்வீகத்தை
அனைவருமே காத்து நிற்போம் தேவர் போற்றி


```````````````````````````````````````````````````

***************************************************
```````````````````````````````````````````````````

விடுதலைக்காய் கூட்டங்கள் நடத்தும் போது

விருதுநகர் வீதியெல்லாம் தமுக்கடித்து
அடுக்கடுக்காய் மக்களையே சேர்க்கும் வண்ணம்
அறிவிப்புச் செய்து நின்ற காமராஜை
தடுத்தவரைத் தாக்கி அங்கே கொடுமை செய்தார்
தனம் நிறைந்த நீதிக் கட்சி பணம் படைத்தோர்
அடுத்த நாளே தேவர் மகன் அங்கே சென்றார்
அடித்தவர்கள் ஒரு நாளில் வருத்தம் தன்னை


வெளிப்படையாய்க் கேட்கவில்லை என்று சொன்னால்

விருதுநகர் இருக்காது என உரைத்தார்
அடித்ததிலே பெருமை கொண்டோர் மனம் திருந்தி
அன்றைக்கே மன்னிப்பைக் கேட்டு நின்றார்
கொடுப்பதிலே பெருமை கொண்ட தேவர் மகன்
கொள்கைக்காய் நிற்கின்ற எங்கள் தொண்டர்
வடுவில்லா காமராஜர் தன் வழியில்
வராதீர் வந்தால் நான் வருவேன் என்றார்


தமிழ்க்கடல்

நெல்லைக்கண்ணன்
69.அம்மன் சந்நிதித் தெரு
திருநெல்வேலி நகரம்
627 009
நெல்லை கண்ணன் தளத்தைப் பார்வையிட..


Continue reading →
Tuesday, November 1, 2011

தேசிய தலைவர், தெய்வீகத்திருமகன் பசும்பொன் தேவர் 104 வது ஜெயந்தி விழா

0 comments
தேசிய தலைவர், தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்  தேவர் அவர்களின் 104 வது ஜெயந்தி விழாவிற்கு வருகைதரும் உறவினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

 


மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில் பசும்பொன் பூமியில், உறவுகளின் உணர்வுகள் சங்கமிக்கும் பொன்னான பொழுதில் வாஞ்சையோடு காத்திருப்போம்.
Continue reading →

Popular Posts

Popular Posts