Total Pageviews

Monday, October 31, 2011

உசிலம்பட்டியில் தேவர் ஜயந்தி, குருபூஜை விழா

0 comments
 

உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 104-வது பிறந்த நாள் விழா மற்றும் 49-வது குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கள்ளர் கல்விக் கழகத்தின் தலைவர் மாசாணம் தலைமையில் கல்லூரி முதல்வர் பாலுச்சாமி, பேராசிரியர்கள் விஜயன், அக்னி, வைரமணி, மணிகண்டன், ராமன் ஆகியோர் கலந்து கொண்டு உசிலம்பட்டியில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் முருகன்ஜீ தலைமையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ரெட்காசி, சங்கிலி, ரகு, மாவீரன், அக்னி பிரதாப் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்தனர்.
நேதாஜி சேனைத் தலைவர் ஓ.கே.ராமதாஸ், நிர்வாகிகள் பழனி, ராஜபாண்டி, வீரணன் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஏ.கே.டி.ராஜா தலைமையில் வழக்குரைஞர் ரவிச்சந்திரன், நகரச் செயலர் மொக்கச்சாமி, ஒன்றியச் செயலர் சுரேஷ், அழகுராஜா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் தீபா பாண்டி, முன்னாள் புறநகர் மாவட்டச் செயலர் விஜயகாந்தன், வட்டார காங்கிரஸ் முத்துக் கண்ணன், சேவா தளம் அய்யாவு ஆகியோரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பிரமலைக் கள்ளர் இளைஞர் பேரவைத் தலைவர் ராஜபாண்டி, மாநிலச் செயலர் பூபதி ராஜா வினோத். சுந்தர், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் ஐ.ராஜா, வழக்குரைஞர் மணிகண்டன், பாலுச்சாமி, பரமத்தேவர், மலைச்சாமி, பாஸ்கர பாண்டியன் மற்றும் பலர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பொதுமக்கள் பலர் முடிகாணிக்கை செலுத்தி வணங்கினர். பின்னர் அவர்கள் பசும்பொன் நோக்கிச் சென்றனர்.

Leave a Reply

Popular Posts

Popular Posts