Total Pageviews

Saturday, February 18, 2012

தேவர் திருமகன் மகிமை என்று பூரிக்கும் தம்பதியினர்.

0 comments
 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றால் அனைவருக்கும் நினைவு வருவது தேசியமும் , தெய்வீகமும் ஆகும். தன்னுடைய இளமைக் காலம் தொட்டே ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த தேவர் பின்னாளில் முருகப் பெருமானின் அவதாரமாக கருதப்பட்டு
அனைத்து மக்களாலும் வழிபடப் பட்டார். சித்த ஞானத்தால் பறவைகளோடும், விலங்குகளோடும் தன்னுடைய சிந்தனைகளை பரிமாறிக்கொள்ளும் வரம் பெற்றிருந்த தேவர் பெருமகனார் ஒட்டுமொத்த உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதையே அனைவருக்கும் போதித்தார். மக்களோடு மக்களாக தன்னுடைய வாழ்வை கழித்தபோதும் அவரின் தெய்வ அனுகூலங்களை அறிந்த மக்கள் தொடர்ந்து அவரது கோவிலுக்கு சென்று வழிபடுதல் , வேண்டுதல் செய்தல் , நேற்றிக்கடன் செலுத்துதல் , மொட்டையடித்தல் , பால் கொடம் எடுத்தல், முளைப்பாரி போடுதல் என்ற வழிபாடுகள் நீளும்.
தேவர் திருமகனார் அவதரித்ததும் , மறைந்ததும் ஒரே தினமாதலால் அக்டோபர் முப்பது அன்று தேவர் கோவிலில் லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி தரிசிக்க வருவார்கள். அப்படி அங்கே வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை முன்வைத்து செல்வார்கள். பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை முடித்த பிறகும் எட்டு வருடங்களாக குழந்தை பேறின்மை என்ற நிலையில் இருந்த தம்பதியினர் 2010 ம் வருடம் நடந்த குருபூஜை அன்று தனது வேண்டுதலை நிறைவேற்றுமாறும், அப்படி பிறந்தால் அந்த குழந்தைக்கு உங்கள் பெயர் வைத்து உங்களுக்காக தொண்டாற்ற அற்பணிக்க தயாராக வுள்ளேன் என்றும் வேண்டிக் கொண்டாராம். அடுத்த நாற்பதாவது நாளில் நான் கருத்தரித்தேன் என்று கூறிய சீதா மேலும் கூறுகையில் எங்களை பரிசோதித்த மருத்துவர்கள் நான் கருத்தரித்தது நம்பும்படியான நிகழ்வில்லை என்பதால் திரும்பவும் சோதித்து உறுதிசெய்த ஒன்பதாவது மாதத்தில் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சென்ற குருபூஜை அன்று பெயர் வைக்கப்பட்டது. முத்துராமலிங்கம் என்ற பெயரால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். எவ்வளவு அழுகையானாலும் தனது கழுத்தில் கிடக்கும் தேவர் செயின் காண்பித்தால் உற்று நோக்கியபடி சிரித்து விடுவார்" என்று மெய் சிலிர்க்க பேசிப்போனார்கள்.

THANX : DEVARTV.COM

Leave a Reply

Popular Posts

Popular Posts