திருநெல்வேலி : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை ஜங்ஷனில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 104வது ஜெயந்தி விழா நேற்று நெல்லையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் : நெல்லை ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு காங்,. எம்பி., ராமசுப்பு தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கவுன்சிலர் விஜயன், காங்., நிர்வாகிகள் சரவணன், ஜெகநாதராஜா, சிந்தா சுப்பிரமணியன், ரமேஷ் செல்வன், வேணுகோபால், சண்முகராஜ், முருகேசன், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாஜ., : நெல்லை மாவட்ட பாஜ., சார்பில் மாவட்ட தலைவர் கட்டளை ஜோதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கவுன்சிலர் அழகுராஜ், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ரமேஷ், நத்தம் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேமுதிக., : நெல்லை மாநகர் மாவட்ட தேமுதிக., சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி, மாவட்ட அவைத் தலைவர் தலைமையில் கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மாவட்ட வக்கீல் அணி பொருளாளர் ஜெயபாலன், துணை செயலாளர் ஜெயசந்திரன், தொழிற்சங்க தலைவர் தேவதாஸ், பகுதி செயலாளர்கள் சுந்தரராஜன், சேக், கவுன்சிலர் தானேஸ்வரன், ஆனந்தமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக., : நெல்லை மாவட்ட மதிமுக., சார்பில் ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். இதில் மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் டேனியல் ஆபிரகாம், சரோஜினி, ஜோசப், பகுதி செயலாளர்கள் ஜெயின் உசேன், மணப்படை வீடு மணி, வடிவேல் பாண்டியன், பொன்.வெங்டேஷ், ஜமால், கல்லத்தியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாமக., : பாமக., கட்சி சார்பில் ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். இதில் மாநகர இளைஞரணி துணை செயலாளர் லிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் சேந்திமங்கலம் சேவியர், பகுதி செயலாளர்கள் அழகர், விஸ்வநாதன், யூனியன் செயலாளர் சேதுபதி, யூனியன் தலைவர் சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மூ.மு.க., : நெல்லை மாவட்ட மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு தாழையூத்து ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதில் துரைராஜ், சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் : நெல்லை மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட தலைவர் பாலு தலைமையில் கைலாசபுரத்திலிருந்து பால் குட ஊர்வலம் நடந்தது. நிறைவாக ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு நிர்வாகிகள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் நிர்வாகிகள் கருணாகரபாண்டியன், சண்முகையா பாண்டியன், தங்கபாண்டியன், ராஜவேலு, இசக்கி பாண்டி, சுப்பையா, மருதுபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி : அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் துர்க்கை முத்து கட்சியினருடன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.