Total Pageviews

6,818
Wednesday, November 9, 2011

வெள்ளைச்சாமி தேவர் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

0 comments
 

சென்னை, நவ. 8-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசுகளில் ஒருவருமான என்.வெள்ளைச்சாமி தேவர் நேற்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

வெள்ளைச்சாமி தேவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது இயக்கத்தினைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

வெள்ளைச்சாமி தேவர் மறைவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக நிறுவனத் தலைவர் டாக்டர் என்.சேதுராமனும்றீ இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ``தேவர் சமுதாய மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவரது இழப்புக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் அ.இ.மூ.மு.க. கட்சி கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Popular Posts

Popular Posts